Monday 26 November 2012

2012 இல் உலகம் அழியுமா????????????


உலகில் தோன்றும் ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் மரித்துப்போகும் ஆனால் பூமியில் வாழும் ஒட்டுமொத்த உயிரும் ஒரே நாளில் மரித்துப்போனால்? எண்ணிப்பார்க்கவே எம்முள் அச்சம் குடிகொள்வதை தவிர்க்கமுடியவில்லை. ஆனால் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் நாள் இது நடந்தே தீரும் என்கிறது ஒரு கூட்டம். சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் பூமியில்  இருந்த டைனோசோர்கள் அழிந்தது போல இப்போது இருக்கும் மனித இனமும் வருகின்ற டிசம்பரில் ஏற்படப்போகும் பிரளயத்தினால் அழியப்போகிறது.


பூமியில்  மிகப்பெரிய எரி கல் ஒன்று மோதியதனால் வெளியான வெப்பம், தூசு என்பவற்றுடன் இக்கல் விழுந்ததனால் ஏற்பட்ட பூமி அதிர்வு, கடல் பரப்பிலிருந்து வெளியான நீர் என்பவற்றாலேயே டைனோசர்கள் பூமியில் சுவடுகளாக மாறியதற்கு காரணம். மேலும் மெக்சிகோ பகுதியில் ஏற்பட்ட இச்சம்பவத்தின் போது வெளியான தூசு பூமியிலிருந்து முழுமையாக நீங்குவதற்கு சில ஆண்டுகள் எடுத்தது.



இதனால்  பூமியின் முழுப்பகுதியுமே பாதிக்கப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கான இனங்கள் அழிவடைந்ததாம். இதிலிருந்து எஞ்சிய உயிரினங்களிலிருந்தே கூர்ப்பு மூலம் மனிதன் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக ஆரம்பித்து தற்கால மனிதனாக தோற்றம் பெற்று சுமார் 13 ஆயிரம் வருடங்கள் என்கிறது விஞ்ஞானம்.



இவ்வாறு பூமிக்கு வந்த மனித இனம், இந்த டிசம்பர் மாதம் 21ஆம் தேதி ஏற்படப்போகும் பிரளயத்தினால் இப் பூமியை விட்டுச் செல்லப் போவதை யாராலும் தடுக்க முடியாது. இதனை நாசாவும் நன்கு அறிந்து வைத்துள்ளது. இவ்வாறெல்லாம் பல தகவல்களை கசியவிட்டு மக்களை பீதியில் தள்ளிவிட்டுள்ளார்கள் இனம் தெரியாத சிலர்.



உண்மையில் பிரளயம் என்றால்? இது நிச்சயம் டிசம்பரில் ஏற்படுமா? என்றவாறான பல கேள்விகளுக்கும் இதுவரையில் நம்பும் விதமாக வெளியாகியுள்ள தகவல்கள் இவ்வாறு அமைந்துள்ளது.



சூரியத்தொகுதியை போலவுள்ள பல்லாயிரக்கணக்கான தொகுதியில் ஒரு தொகுதியிலிருந்து நிபிறு எனும் கோள் 3600 வருடங்களுக்கொரு முறை பூமியை மிக மிக நெருங்கி வரும் இதன் போது நிபிறுவின் துணைக்கோள்களுடன் சேர்த்து மொத்தமாக 6 கோள்கள் பூமியை பாதிப்புக்குள்ளாகவும் வைப்புகள் உள்ளன.



இதனால் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் சுனாமி, பூமியதிர்ச்சி, எரிமலை வெடிப்புக்கள் மற்றும் நிலங்கள் பல துண்டுகளாக பிளவடையும் இதனைத் தொடர்ந்து சுமார் 2 வருடங்களில் படிப்படியாக மிக மெதுவான முறையில் பூமி தன்னை மீளமைக்கும். இதற்கிடையில் பூமியிலுள்ள மனிதர்களில் 2/3 பங்கினருக்கு மேல் அழிந்துவிடுவார்கள். இதுவே ‘பிரளயம்’ எனச் மிகச் சுருக்கமாக விளக்கியுள்ளார்கள்.



அடுத்த 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழியாது என்கிறார் இந்திய விஞ்ஞானி அய்யம்பெருமாள். 
2012-ல் உலகம் அழிவது சர்வ நிச்சயம் என்று அடித்துக் கூறி வருகிறார்கள் சில மேற்கத்திய விஞ்ஞானிகளும் ஜோதிடர்களும்.
இதற்கு ஆதாரமாக அவர்கள் சில காரணங்களை எடுத்துகாட்டாக சொல்லி வருகிறார்கள்.



1. மாயன் காலண்டர்:
மாயன் நாகரிகத்தின் கருதுகோள்படி, உலகம் 2012-ல் அழிந்தாக வேண்டும். மாயன் காலண்டரில் இது குறிப்பிடப்பட்டுள்ளதாம். இன்று நாம் பின்பற்றும் தேதி முறை உள்ளிட்ட பல விஷயங்களை கிட்டத்தட்ட துல்லியமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணித்தவர்கள் இவர்கள்தானாம். சூரியன் காலாவதியாகும் தேதியையும இவர்கள் கணித்து வைத்துள்ளார்களாம். அதுதான் இந்த 2012 என்று கூறுகிறார்கள்.



2. சூரியப் புயல்கள்
சூரியனுக்குள் ஏற்படவிருக்கும் பனிப்புயல்கள் காரணமாக ஏற்படும் கதிர்வீச்சு பூமியை பொசுக்கிவிடும் என்கிறார்கள் சூரிய ஆராய்ச்சியாளர்களில் ஒரு பிரிவினர்.



3. பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது…
விஞ்ஞானிகள் கூற்று ஒரு பக்கமிருந்தாலும், திரு விவிலிய நூலில் உலகம் (2012-ல் என்று குறிப்பிடப்படவில்லை) அழிந்துவிடும் என்று சொல்லப்பட்டுள்ளதாம். கடவுளுக்கும் சாத்தானுக்கும் கடைசி யுத்தம் (Armageddon) நடக்கும் போது இந்த அழிவு நடக்கும் என்கிறது பைபிள். யுத்த முடிவில் கடவுள் தன் இறுதித் தீர்ப்பை பெருவெள்ளம், ஆழிப் பேரலை, பூகம்பம், கடல்கொள்ளுதல் என எந்த இயற்கை நிகழ்வு மூலமாகவும் வெளிப்படுத்தலாம் என்கிறது விவிலியம். அந்த இறுதித் தீர்ப்பு 2012-ல் வரக்கூடும் என்பது சிலரது கருத்து.
இதே கருத்தை சீனத்து நூல் ஒன்றும், சில இந்து புராண நூல்களும் கூட சொல்கின்றனவாம்.



4. கணிதவியல் அடிப்படையில்…
அமெரிக்காவின் பெர்க்கர்லி பல்கலைக் கழக அறிஞர்கள் சிம்பிளாக ஒரு கணக்கு சொல்கிறார்கள். இந்த பூமியின் ஆயுள் எப்போதோ முடிந்துவிட்டதாம். இப்போது அது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாகவும், 2012-ல் அழிவின் உச்சகட்டம் தொடங்கும் என்றும் கூறுகிறார்கள்.


விஞ்ஞானிகள் என்ன கூறுகிறார்கள்.

சூரியனில் இருந்துதான் கிரகங்கள் தோன்றி பிரபஞ்சத்தில் இயங்கி வருகின்றன. சூரியன் தோன்றி 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன. சூரியனில் இருந்து வினாடிக்கு 750 டன் ஹைட்ரஜன் ஆவி வெளியாகி 746 டன் ஹீலியமாக வெளிப்படுகிறது. மீதமுள்ள 4 டன் ஒளியாகவும், வெப்பமாகவும் வெளிப்படுகிறது.
விஞ்ஞானிகளின் அதிநுட்ப ஆராய்ச்சியில் இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கு வாய்ப்பே இல்லை. பலர் கூறுவதுபோல் 2012-ல் கண்டிப்பாக உலகம் அழியாது. 2020-ம் ஆண்டு ஒரு குறுங்கோள் பூமியை தாக்கும் என்று கூறுகிறார்கள். அவ்வாறு தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. குறுங்கோள் இடம் பெயர்ந்து பூமியை தாக்கும் நிலை ஏற்பட்டால் அக்னி ஏவுகணை மூலமாக குறுங்கோளை பொடிப்பொடியாக தகர்க்கும் சக்தி உலக ஆய்வுக்கூடத்தில் உள்ளது. ஆகவே எந்த சூழ்நிலையிலும் பூமிக்கு ஆபத்து ஏற்படாது.


0 கருத்துக்கள்:

Post a Comment