Sunday 11 November 2012

1,130 ரூபாய்க்கு ஆகாஷ் - 2 டேப்ளட் பிசி

குறைந்த விலை, "ஆகாஷ் - 2 டேப்ளட் பிசி' டில்லியில் அறிமுகம் செய்யப்பட்டது.ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம், ஐபேட் என்ற பெயரில், "டேப்ளட் பிசி'யை அறிமுகம் செய்தது. 
சில தொழில்நுட்ப கோளாறுகளால், "ஆகாஷ் - 1 டேப்ளட் பிசி', மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்படாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், "ஆகாஷ் - 2 டேப்ளட் பிசி' அறிமுக நிகழ்ச்சி, டில்லியில் நடந்தது. 2,700 ரூபாய் விலை கொண்ட, "ஆகாஷ் டேப்ளட் பிசி'களை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிமுகம் செய்தார்.
 "ஆகாஷ் - 2 டேப்ளட் பிசி'யை, மத்திய அரசு, 2,263 ரூபாய்க்கு வாங்குகிறது. அதை, 50 சதவீத விலை குறைப்பில், 1,130 ரூபாய்க்கு, மாணவர்களுக்கு வழங்குகிறது. இந்த விலையையும் குறைத்து, அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆகாஷ் - 2 டேப்ளட் பிசி, லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் கொண்டது. ஒரு, கிகா ஹெர்ட்ஸ் புராசசர், 512 எம்.பி., ராம், ஏழு அங்குல திரை போன்ற அம்சங்களை கொண்டது

0 கருத்துக்கள்:

Post a Comment