Sunday 30 September 2012

அவுட்லுக் என மாறியது மைக்ரோசாப்ட் ஹாட்மெயில்



மைக்ரோசாப்ட் நிறுவனம் 32.4 கோடி பேர் பயன்படுத்தும் இமெயில் சேவையான ஹாட்மெயிலுக்குஅவுட்லுக் என்று பெயர் மாற்றம் செய்துள்ளது. சபீர் பாட்யா மற்றும் ஜேக் ஸ்மித் ஆகிய இருவரும் 1996ல் உருவாக்கிய இந்த ஹாட்மெயில் சேவையை,மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 1997ம் ஆண்டில் 40 கோடி அமெரிக்க டாலருக்கு வாங்கியது. இப்போது 15 ஆண்டுக்கு பிறகு அதன் பெயரை அவுட்லுக் என நேற்று மாற்றியுள்ளது. 

அவுட்லுக் இமெயிலில் புதிய வசதிகளையும் வாரி வழங்கியுள்ளது. இப்போது அனைவராலும் எளிதாக பயன்படுத்தப்படுவது பேஸ்புக்டுவிட்டர் போன்ற சமூக இணையதளங்கள். 
அவுட்லுக் இமெயில் சேவையில் பேஸ்புக் சாட் வசதியை பெறலாம். அதோடு பேஸ்புக்டுவிட்டரில் இருந்து வரும் தகவல்களும் உடனுக்குடன் அவுட்லுக் இமெயில் சேவையின் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது.

வேர்ட்ஸ்எக்எல்பவர்பாய்ன்ட் போன்ற பக்கங்களில்அவுட்லுக் மூலம் எளிதாக எடிட் செய்யவோஷேர் செய்யவோ முடியும். அவுட்லுக்கில் இணைக்கப்படும் புகைப்படங்களை ஸ்லைடு ஷோவில் பார்க்க முடியும். ஸ்கைப் வீடியோ கால் வசதியினை இந்த மைக்ரோசாஃப்ட் அவுட்லுக்கில் பெறலாம். ஆனால்இந்த ஸ்கைப் வீடியோ கால் வசதியைஇன்னொரு ஸ்கைப் வீடியோ கால் வசதி கொண்டவருடன்தான் பயன்படுத்த முடியும்.

0 கருத்துக்கள்:

Post a Comment